இலங்கையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடும் முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இது பலமுறை நீட்டிக்கப்பட்ட கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடுவதை நிறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு கல்விப் பணிகளை தொடர அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.