சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை சரிய தொடங்கியது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த விலை சறிவுக்கு முக்கிய காரணமாக தக்காளி வரத்து அதிகரிப்பு என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சந்தையில் தக்காளியை வாங்க ஆளில்லாத காரணத்தினால் அவற்றை கீழே கொட்டும் நிலையை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.