Categories
உலக செய்திகள்

2 வருடத்திற்க்கு முன் இறந்த பெண்ணிடம் வாடகை வசூல்…. இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

இங்கிலாந்து நாட்டில் இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் இருக்கும் பெக்காம் என்னும் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஷீலா செலியோன் என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தன் பிளாட்டில் இருக்கும் சோபா ஒன்றில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களாக இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்தாததால், இது குறித்து குடியிருப்பு அமைப்பு  விசாரணை செய்யாமல் அவரின் சமூக பலன்கள் மூலமாக வாடகையை வசூலித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தான் ஷீலா இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்பில் வாடகை இருக்கும் நபர் இரண்டு வருடங்களாக இறந்து கிடந்தது கூட தெரியாமல் இருந்த அந்த குடியிருப்பு அமைப்பை நீதிமன்றம் கண்டித்துள்ளது. அது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்காக அந்த குடியிருப்பு அமைப்பு மன்னிப்பு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |