Categories
உலக செய்திகள்

ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்திட்டாங்க…. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்ற சில வாரங்களாக கிழக்கு உக்ரைன் மீது தீவிரமான தாக்குதல்களை நடத்திவரும் ரஷ்யபடைகள் நேற்று உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள கிரோவோஹ்ராட்ஸ்கா பிராந்தியத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை தொடுத்தன. அங்கு உள்ள விமானப்படைதளம் மற்றும் ரயில்வே கட்டமைப்பை குறி வைத்து சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷ்யபடைகளின்  கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து உக்ரைன் ராணுவமானது பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ரஷ்யபடைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தெற்கு கெர்சான் பிராந்தியத்திலுள்ள டினீப்பர் ஆற்று பாலத்தை உக்ரைன் வீரர்கள் தகர்த்தனர். இந்த நிலையில் தானிய ஏற்றுமதிக்காக கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைனிய துறைமுகங்களை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் கையெழுத்திட்ட சில மணி நேரத்துக்குள்ளாக ரஷ்ய படைகள் ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தின. கருங்கடலிலுள்ள ஒடேசா துறைமுகத்தின் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் இல்லை.

ஒப்பந்தத்தைமீறி கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதனிடையில் கிழக்கு உக்ரைனிலுள்ள டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யபடைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க வௌியுறவு அமைச்சகம் பலியான அமெரிக்கர்களின் குடும்பத்தினருடன் தொடர்பிலிருந்து வருவதாகவும், தேவையான அனைத்து தூதரக சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவானது ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபரான ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷியாவின் இத்தாக்குதல் ஒன்றை மட்டும் நிரூபிக்கிறது. ரஷ்யா என்ன கூறினாலும், வாக்குறுதி அளித்தாலும், அதனை செயல்படுத்தாமல் இருப்பதற்கான வழிகளைக் இது காட்டுகிறது என ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

Categories

Tech |