Categories
மாநில செய்திகள்

இனி 1 மணி நேரத்திற்கு முன்பு பள்ளிக்கு….. தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் குடிநீர் பிரச்னை, கழிவறை பிரச்னை  குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். பத்திரிகையாளர்களிடம் ஆசிரியர்கள் வாய் திறக்கக் கூடாது, மாணவர்களுக்குள் அடித்துக்கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து  போன்ற  அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் சத்துணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா,  முட்டை நல்ல நிலையில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தினசரி நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |