Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையில் வைத்து…. 4 ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. பகீர் சம்பவம்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் அருகே கோபிஷா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மாணவி மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து சென்ற பள்ளி காவலாளி லட்சுமி நாராயணன் திடீரென அவள் கண்ணையும் வாயையும் பொத்தி கழிவறைக்கு தூக்கிச் சென்றார்.

அதன் பிறகு அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவி தனது ஆசிரியரிடம் கண்ணீர் மல்க கூறினார். பின்னர் போலீஸ் நடத்திய விசாரணையில் பள்ளியின் காவலாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார் . இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பள்ளி கழிவறையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |