தலைநகர் டெல்லியில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்டவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர் என்றும் அவர் உள்ளூரிலேயே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் குரங்கமை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து நாட்டில் முதல்முறையாக கேரளாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு லேசான காய்ச்சலும், உடலில் புண்களும் கண்டறியப்பட்டுள்ளது.