Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி: வீரர்களுக்கு பலகட்ட பரிசோதனைக்கு பின் அனுமதி…… அமைச்சர் மா.சு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கு பல நாடுகளிலும் இருந்து வீரர்கள் வர உள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் குரங்கமை பாதித்த நாடுகளில் இருந்து வரும் வீரர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கபடுவர்கள்.

மேலும் 344 மருத்துவ பணியாளர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் பிரதமர் மோடி இடம்பெறாதது குறித்து பதில் அளித்த அவர், ஒலிம்பியாட் வரவேற்பு பாடல் வீரர்களை வரவேற்பதற்கான பாடல் தானே தவிர பிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |