அமெரிக்க நாட்டில் குரங்கு அம்மை நோய், குழந்தைகளையும் பாதிப்பதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
உலகின் பல நாடுகளில் குரங்கு பொம்மை பாதிப்பு பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டிலும் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் பரவத் தொடங்கியது. அங்கு சுமார் 44 மாகாணங்களில் 1500 மக்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அதிகமாக பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த குரங்கு அம்மை நோய் தற்போது அமெரிக்க நாட்டில் பிஞ்சு குழந்தைகளையும் தாக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா நகரில் இரண்டு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு குரங்கு அம்மை நோயை தடுப்பதில் சரியாக செயல்படவில்லை என்று பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.