திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு செலவாகும் பணத்தை சாலை, தொழில் வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்று கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பதிலாக, திமுக அறக்கட்டளை பணத்தை வைத்து நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.