செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும் அச்சமும் கவலையும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. போதை கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நாள்தோறும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோதமான விற்பனை குறித்த செய்திகள் தான் செய்தித்தாள்களில் இடம் பெறுகின்றன. இந்த நிலையில் போதை கலாச்சாரத்தை எதிர்த்து பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். போதை கலாச்சாரத்தால் மிகப்பெரிய பேரழிவை நோக்கி தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், போதை கலாச்சாரத்துக்கு எதிராக அரசு மற்றும் காவல்துறை மேற்கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக விமர்சித்துள்ளார்.