கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இதனால் இதுவரைக்கும் 16,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலால் உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 95% குரங்கு அம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது: “விந்தணுக்களில் குரங்கம்மை டி.என்.ஏ இருப்பது கண்டறியப்பட்டது. பாலியல் உறவில் பரவுகின்ற அளவு இதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை நாங்கள் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. சைபில்ஸ், ஹேர்ப்ஸ் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்தொற்றுக்களின் அறிகுறிகளை போலவே குரங்கம்மைக்கும் அறிகுறிகள் இருக்கும். வாய் அல்லது ஆசனவாய் பகுதியில் புண்கள் வருவதும் இதன் அறிகுறிகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.