உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குழு, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம், தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது.
அந்நாட்டிற்கு நிதி உதவிகள், ஆயுதங்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து உக்ரைனுக்கு இந்த உதவிகள் அளிக்கப்படும். அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உக்ரைன் மக்களுக்கு எப்போதும் ஆதரவு தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.