Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BIG ALERT: இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்… கோவை போலீசார் எச்சரிக்கை…!!!

கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாள். இவருடைய செல்போனுக்கு உடனடியாக மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து மூதாட்டி ரூ. 10 செலுத்தியுள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து 4 கட்டங்களாக ரூ.4.25 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தெரியாத நபர்கள் அனுப்பும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரித்துள்ளது. சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கிகள் சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |