Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தன்னம்பிக்கை மேலோங்கும்..! வெற்றி உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலன்கள் உண்டாகும். வெளியில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

குடும்பத்தில் சுமுகமான சூல்நிலை நிலவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைவனை வழிபடுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள் தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |