Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு…. உற்சாகத்தில் மலைவாழ் மக்கள்….!!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதற்கு வங்காளதேச மலைவாழ் சமூக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்ற ஜாதியோ சங்சாத் முன், சந்தால் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு கொண்டாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

இந்தியாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியை அவர்கள் இசை , நடனம் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜெயன்ஷாஹி ஆதிவாசி மேம்பாட்டு கவுன்சில், டாக்கா வாங்கலா கொண்டாட்டக் குழு (நக்மா), சிறு இனக் குழுக்களின் பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட வங்காளதேசத்தைச் சேர்ந்த பல பழங்குடியினர் மற்றும் இனக்குழுக்களின் உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Categories

Tech |