Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் தமிழச்சி” என் உயிர் போனாலும்…. அது தமிழ்நாட்டில் தான்….. தமிழை நெகிழ்ச்சி….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் நமது தேசிய கல்விக் கொள்கை தேவை என்று கூறும் போது இன்னொரு மொழியையும் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்று கூறியிருந்தேன். அதை தான் தேசிய கல்விக் கொள்கையும் கூறுகிறது. இதில் முதல் மொழி நமது தமிழ் மொழி. நமது ஆரம்ப கால பாடத்தை நமது தாய்மொழியான தமிழில் கற்றுக் கொள்ளலாம் என்பது தான் அதனுடைய அர்த்தம். இது பெருமையான விஷயம். இன்னொரு மொழியை கற்பது வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றுதான் நான் கூறினேன்.

இதற்கு “இந்தி இசை இந்திய திணிக்கிறார்கள்” என்பது போல பலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். தமிலக்தில் ஏன் வாலை நீட்டுகிரீர்கள்? என்று கேட்கிறார்கள். வாலை மட்டுமல்ல என் உயிர் போனாலும் தமிழகத்தில் தான் போகும். நான் ஒரு தமிழச்சி. பணி நிமித்தமாக வேறு மாநிலம் சென்றுள்ளேன். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதை பற்றி பேசுவதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. முழுவதுமாக நான் இங்கு இருப்பேன். என் உயிர் போனாலும் அது தமிழகத்தில் தான் போகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |