Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு….!!!!

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

நாடாளுமன்றம் வந்தடைந்த திரவுபதி முர்மு, ராம்நாத் கோவிந்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு தனது இருக்கையில் அமர்ந்து ஆவணத்தில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். இவர் பதவியேற்கும் போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

Categories

Tech |