தமிழக முழுவதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் நடப்பு கல்வி கல்வியாண்டில் 11ஆம் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணி அளவில் இந்த விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பகுதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
Categories