தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்த உதவிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரேஷன் கார்டில் உணவு தானியங்களை தொடர்ந்து வாங்காமல் இருக்கும் நபர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் வேறு சில காரணங்களுக்காகவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஒரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர் ஆறு மாதங்களாக ரேஷன் கார்டில் உணவு தானியங்களை வாங்கவில்லை என்றால் அவருக்கு மலிவான உணவு தானியங்கள் தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்க தகுதியற்றவர் என்று அர்த்தம் ஆகும். எனவே மாதந்தோறும் வழங்கப்படும் இந்த வசதியை பலரும் பயன்படுத்தாமல் இருப்பதை அரசு கண்டறிந்தது. அதனால் ஆறு மாதங்களுக்கு மேலாக ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் இருப்பவர்களின் காட் ரத்து செய்யப்படும். அப்படி உங்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டிருந்தால் அதனை நீங்கள் மீண்டும் எளிதில் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.
முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS போர்ட்டலுக்குச் செல்லவும்.
இப்போது ‘Ration Card Correction’ விருப்பத்தில் கிளிக் செய்யவும்.
ரேஷன் கார்டு திருத்தம் பக்கத்தில் உங்கள் ரேஷன் எண்ணைக் கண்டறிய ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
இப்போது உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யலாம்.
அதன் பிறகு விண்ணப்பத்தை PDS, அதாவது பொது விநியோக அமைப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் ரேஷன் கார்டை செயல்படுத்துவதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டால், ரத்து செய்யப்பட்ட ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.