Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சேலம் வழியாக செல்லும் ரயில்கள்…. 21 நாட்கள் ரத்து…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 14 ரயில்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும். அதனைத் தொடர்ந்து சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு- ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா  சிறப்பு ரயில் நேற்று முதல் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இதனையடுத்து ஜோலார்பேட்டை-ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரையும், ஈரோடு- மேட்டூர் டேம் தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில், மேட்டூர் டேம்-ஈரோடு தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகிய ரயில்கள் இன்று முதல் அடுத்த 14ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் ரயில் சேவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து முன்பதிவு செய்தவர்களின் செல்போன் எங்களுக்கு சேவைகள் குறித்த தகவல் அனுப்பப்படும். சேலம் ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் உதவி எண்கள் கொடுக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |