நேபாள நாட்டில் நாகர்கோட் பகுதியில் இருந்து வடகிழக்கே 21 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க பிவில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிப்படவில்லை.
சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதற்கு முன் இல்லாத வகையில் உயிரிழப்புகளும் மற்றும் பொருள் இப்புகளும் ஏற்பட்டுள்ளது. இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ரிக்டரில் 7.8 அளவில் பதிவான நிலநடக்கத்திற்கு 8,964 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.