அதிபர் மாளிகையை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த 9-ம் தேதி மக்கள் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர். இதனை அடுத்து அதிபர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு, சேதங்களை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அதிபர் மாளிகையானது இன்று செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.