பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை படக் குழுவினர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.