Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜராஜ சோழனாக அவதாரம் எடுக்கும் அருண்மொழிவர்மன்” வரலாற்று ஆசிரியர்களின் அசத்தல் விளக்கம்…. செம வைரல்…!!!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு ,பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படக்குழுவினர் புதிதாக ஒரு வீடியோ மற்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் அருண்மொழிவர்மன் ராஜராஜ சோழன் ஆகிறான் என இருக்கிறது. அதன் பிறகு அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் என்பதை சில வரலாற்று ஆசிரியர்கள் விளக்கும் வீடியோவும் இருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |