போலந்து நாட்டில் கடுமையாக புயல் வீசியதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
போலந்தில் நேற்று முன்தினம் கடுமையாக புயல் வீசி தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்தது. எனவே, மசோவா என்னும் மாகாணத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்நகரமே இருளடைந்து காணப்பட்டது. 36,000 மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், புயலில் சிக்கி ஒரு நபர் பலியானதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்புப்படையினர், புயலில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலில் குடியிருப்புகளும், சாலைகளும் சேதமடைந்துள்ளன.