காஞ்சிபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 3,552 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்காக காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் பதிவு செய்தவர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.