Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை நீடிக்கும்.சென்னையை பொருத்தவரை அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |