சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கழகத்தை அந்நாடு வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரமாண்டமான லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிட்டுள்ள அந்த ஆய்வுக் கழக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலகமான தியான்ஹேவுக்கு இடர்க்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்தி வாய்ந்த ஆய்வாக்கமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடந்த ஏப்ரலில் தியான்ஹே மையக் கலம் முதல் முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .