தீக்காயமடைந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சத்திரத்தில் வேல்முருகன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 1/2 வயதுடைய ஷபிஷ்னி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. கடந்த 2-ஆம் தேதி குழந்தையின் தாய் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்களை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள்.
இதனால் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் தீக்காயங்களுடன் இருந்த தனது குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.