ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறிய கருத்தால் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறிய மோடிக்கு இளைஞர்கள் தடியால் அடித்து பாடம் புகட்டுவார்கள் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி பேசியிருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது ராகுல்காந்தி கேள்விக்கு பதிலளிக்க எழுந்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தன்னுடைய பேச்சுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையின் மையப் பகுதிக்கு வந்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறினார். அப்போது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி தடுத்து நிறுத்தினார். கேரளத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி இதில் தலையிட்டதால் கிட்டத்தட்ட மோதல் கொள்ளும் சூழல் உருவானது.
இதனை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.