உலக நாடுகளில் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.
உலக அளவில் அமெரிக்கா பிரிட்டன், இந்தியா, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா போன்ற 75 நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவுவது மிகுந்த கவலை அளிப்பதாக உலக சுகாதார மையத்தை சேர்ந்த மருத்துவர் பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவுவதால் உலக சுகாதார மையம் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் குரங்கம்மை வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவாது என்பதால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரம் மையம் கூறியுள்ளது. இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் என டாக்டர் பூனம் கெத்ரவால் சிங் கூறியுள்ளார்.
மேலும் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் யாருக்கும் இல்லை எனவும், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர் எனவும், தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.