சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி(37)என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்து பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசி இல்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என மட்டம் தட்டி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துமதி 4 மத கர்ப்பிணிமையாக இருந்தார். இருப்பினும் மாமியாரின் தொடர்ந்து துன்புறுத்தல் காரணமாக ஒன்றை மாதத்திற்கு முன் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இந்துமதியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல கணவரும் வரவில்லை. இதனால் மனம் உடைந்த இந்துமதி தாய் வீட்டிலே இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது அக்காவின் செல்போனுக்கு, “எனது சாவுக்கு மாமியார் தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம் என வாட்ஸப்பில் ஆடியோவாக பதிவு செய்து அனுப்பி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த whatsapp ஆடியோவை பார்த்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, இந்துமதி தூக்கில் பிணமாக தூங்கினார். இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதி உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 5 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.