Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்…. திற்பரப்பு அருவியில் ஆய்வு மேற்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு…!!!!!!!

குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர்  கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர்.

அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து சிறுவர் பூங்காவில் விளையாடி தடுப்பணையில் படகு சுவாரி செய்து மகிழ்ந்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேசிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக சுற்றுலா பயணிகளின் நகைகள் உள்பட விலை  உயர்ந்த பொருட்கள் கார்களில் இருந்தும், குளிக்கும் பகுதியில் இருந்தும் திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி  நடைபெற்று வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருவிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தினால் செயல் இழந்து போயின.

இந்த சூழலில் மாவட்ட காவல் சூப்பரண்டு ஹரிஹரன் பிரசாந்த் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன்  தக்கலை போலீஸ் துணை சூபிரண்ட்டு  கணேசன் மற்றும் போலீசார் உடன் இருந்துள்ளனர். இந்த ஆய்வின் போது பாதுகாப்பை மேம்படுத்த அருவிக்கு  செல்லும் நுழைவுப் பகுதி முதல் வாகனங்கள் நிறுத்தப்படும் கடைசி எல்லைப் பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் மதியப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கவும்  முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக குலசேகரம் முதல் திற்பரப்பு வரை ஐந்து மோட்டார் சைக்கிள்கள் ரோந்து நடைபெற்றது. இதில்  மாவட்ட சுற்றுலா ஹரிஹரன் பிரசாந்த் கலந்து கொண்டுள்ளார்.

Categories

Tech |