பாஜக கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி.
நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்றைய முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்து சென்னையில் உள்ள விஜயின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் விஜய் இன்று காலை நெய்வேலியில் நடக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெறும் சுரங்கத்தின் இரண்டாவது நுழைவாயிலில் முன்பு பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது யார் என்றும் இவ்விடத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என வலியுறுத்தியும் பாஜக கட்சியினர் போராட்டம் நடத்திவந்தனர்.
இதனைத்தொடர்ந்து பாஜக கட்சிக்கு எதிராக விஜய் ரசிகர்களும் போட்டி போட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பாஜக கட்சி போராட்டத்தை விடுத்து கலைந்து சென்ற பிறகும் விஜய் ரசிகர்கள் நுழைவாயிலில் கூட்டம் போட்டு கூடியதால் அவர்களை அங்கிருந்து அகற்ற போலிஸார் சிறிய தடியடி நடத்தியுள்ளனர்.