Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலைகளை சுத்தம் செய்வதற்காக…. வாங்கப்பட்ட நவீன தொழிநுட்ப எந்திரம்…. வாகனத்தை இயக்குவது குறித்து தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி….!!

சாலைளை சுத்தம் செய்வதற்கான நவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரிக்கப்பட்டு சேகரித்து செல்கின்றனர். மேலும் தூய்மை பணியாளர்கள் தார்சாலைகள் மற்றும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீமாறு மூலமாக கூட்டி சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சாலைகள் மிகவும் தூய்மையாக இருக்கும் வகையில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள நவீன தொழில் நுட்ப எந்திரத்துடன் கூடிய வாகனம் ஒன்றை வாங்கியுள்ளது. இந்த வாகனம் சாலையில் செல்லும் போது அதில் உள்ள எந்திரத்தை இயக்கி அதன் முன்பகுதியில் உள்ள சீமாறு போன்ற எந்திரம் சாலைப்பகுதியில் உள்ள குப்பைகளை சேகரித்து கொடுக்கும். அதனை வாகனத்தில் உள்ள எந்திரம் உள் இழுத்து கொள்ளும். இந்நிலையில் சாலைகளின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளை ஒட்டி கீழ்பகுதியில் சேர்ந்திருக்கும் மண், தூசியையும் இந்த எந்திரம் இழுத்து வந்து விடும்.

இதனையடுத்து எந்திரத்தில் உள்ள டேங்கில் குப்பைகள் சேர்ந்த பிறகு அதை வேறுவாகனத்தில் கொட்டிவிட்டு தொடர்ந்து இயக்கலாம். இந்த நவீன எந்திரத்துடன் கூடிய வாகனத்தை நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் பி.சத்தியநாதன், நகராட்சி பொறியாளர், உதவிப்பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இந்த வாகனத்தை இயக்குவது எப்படி என்பது குறித்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வாகனத்தை விற்பனை செய்துள்ள நிறுவனத்தினர் பயிற்சி அளிக்க உள்ளனர். அதன் பிறகு இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |