2 1/2 அடி உயரம் கொண்ட பெண் பள்ளிகொண்டாவில் குரூப்-4 தேர்வு எழுதினார்.
தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இங்கு 332 பேர் தேர்வு எழுதினார்கள். 68 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்காநல்லூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் ஞானப்பிரியா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றார். இவர் 2 1/2 அடி உயரம் உள்ளவர். மேலும் சரியாக நடக்க முடியாததால் அவரின் தம்பி தூக்கி வந்து தேர்வு மையத்தில் அமர வைத்தார். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் இவரை அதிசயமாக பார்த்தார்கள்.