மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள சாலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிக விபத்து ஏற்படும் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் கோசந்திர ஓடை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரம் உள்ள சாலை அகலப்படுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் சாலயோரம் இருக்கும் மரங்களை அகற்றாமலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையோரம் உள்ள மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.