Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குரூப் 4 தேர்வு மையத்துக்குள் தாமதமாக வந்தவர்கள்…. “தேர்வு எழுத மறுப்பு”…. சாலையில் தர்ணா போராட்டம்….!!!!!!

திருவாரூரில் குரூப் 4 தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் கண்டித்து சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தமிழகம் முழுவதும் நேற்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனால் திருவாரூர், கூத்தாநல்லூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் 93 தேர்வு மையங்களில் 122 தேர்வறைகள் எண் அமைக்கப்பட்டு இருந்தது. இத்தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு எழுத 35 ஆயிரத்து 646 விண்ணப்பித்திருந்தார்கள்.

காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத 09.05 மணிக்கு வந்தவர்களை தேர்வு எழுத போலீசார் அனுமதிக்க வில்லை. இதனால் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது தேர்வு விதிகளின்படி உங்களை அனுமதிப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. ஆதலால் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து செல்ல வேண்டும் என கூறினார்கள். இதையடுத்து தேர்வு எழுத வந்தவர்கள் அங்கிருந்து கண்ணீருடன் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Categories

Tech |