Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெண்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள திருகாளிப்பட்டி பகுதியில் மாதவராஜ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவராஜ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாதவராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவராஜின் உடலை வீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |