எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் சுடுகாட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது பெண்ணின் உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் 40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கிடந்தது.
இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த பெண் யார்? அவரை யாரேனும் கொலை செய்தனரா? உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.