என்.எல்.சி நிறுவனத்தில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் வருமானவரித்- துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் நடிகர் விஜயையும் விட்டுவைக்காத வருமானவரித்துறையினர், நெய்வேலியில் நடைபெற்று கொண்டிருந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்றனர். அங்கு அவரிடம் சிறிது நேரம் விசாரித்து விட்டு பின், அவரது காரிலேயே சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர். அப்போது விஜய் பிகில் சம்பளமாக 30 கோடி வாங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விஜயின் மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெற்றனர்.
இந்த சோதனை தமிழ் திரையுலகையே உலுக்கியது என்றே சொல்லலாம். இதில் அன்புசெழியன் மற்றும் AGS நிறுவனத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. ஒருபுறம் விஜய் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஆதரவாக ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
இதையடுத்து நீலாங்கரை, சாலிகிராமம், பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனை நேற்று இரவு 8 மணியளவில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட இந்த சோதனை 23 மணி நேரத்தை கடந்து நடைபெற்றது. விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக வெளியான தகவலின் படி தான் அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆனால் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
இதையடுத்து நடிகர் விஜய் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் மீண்டும் பங்கேற்றார். தளபதி படப்பிடிப்புக்கு திரும்பி விட்டார் என்பதால் விஜய் ரசிகர்கள் இனி பிரச்னையில்லை என்று நினைத்தனர். ஆனால் பிரச்சனை வேறு விதமாக வர ஆரம்பித்தது.
அது என்னவென்றால் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தின் முன்பு பாஜகவினர் திடீரென்று இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு எப்படி அனுமதி வழங்கலாம் என்று கோஷம் எழுப்பினர். என் எல் சி சுரங்கம் பகுதியில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
இங்கு சூட்டிங் நடத்த கூடாது ஆகவே இதனை நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால் படக்குழுவினரோ பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்.10 ஆம் தேதி வரை என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் ஏன் பாஜகவினர் போராட்டம் நடத்துகின்றனர் என்று கடுப்பான விஜய் ரசிகர்கள் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி முன் அலைகடலென குவிந்தனர். படப்பிடிப்பு அனுமதி வழங்கியதற்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில் ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கி கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து விசிகவினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வேலையே காட்ட ஆரம்பித்து விட்டனர். அதாவது #தாமரை_மயிர்ல_கூடமலராது என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முதலிடத்தில் இருந்த ஹேஸ்டேக் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. போராட்டத்தின் போது தளபதி விஜய் அங்கு வந்து ரசிகர்ளுக்கு கை காட்டினார். அப்போது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
https://twitter.com/imMohanc/status/1225762785272815616
https://twitter.com/prabhujbps/status/1225773341677473792