ஜஸ்டீஸ் லீக், கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள், தொடர்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஜேசன் மோமோ சென்ற கார் விபத்துக்குள்ளானது. சான் பிரான்ஸிஸ்கோ பகுதியில் சென்று கொண்டிருந்த அவரது கார், குறுக்கே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உடனே மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜேசன் மோமோவிற்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Categories