எரிபொருள் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எரிபொருள் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெட்ரோல் பங்கில் முறையாக பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால், வாகன ஓட்டிகள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் பெட்ரோல் கிடைக்காததால் ஆத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் நடத்த முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வானம் ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.