அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர பாலாஜி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு. ப. கிருஷ்ணன், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தாங்களே உண்மையான தலைவர் என அதிமுகவுக்கு உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 14 பேரை அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து 15 நிர்வாகிகளை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உள்ளார். அதன்படி முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், ராஜலட்சுமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது தவிர முகமது அலி ஜின்னா, பாரதியார், சிவா, அண்ணாதுரை, ராஜ்மோகன், ராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீதரன் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.. இவர்களுடன் அதிமுகவினர் தொடர்பு வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் அடுத்தடுத்த அறிவிப்புகளல் தமிழக அரசில் குழப்பம் நீடித்துவருகிறது.