Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது….. வெளியான தகவல்….!!!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் தேர்வெழுதியுள்ளனர். 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த தமிழகத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் 7,301 பணியிடங்களுக்கு நிலையில், 3 லட்சத்துக்கும் மேலானோர் தேர்வெழுத வரவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளும், நவம்பரில் கலந்தாய்வும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |