தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 26) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம்:
வடக்கன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கால்கரை, வேப்பிலாங்குளம், வடக்கு பெருங்குடி, தெற்கு பெருங்குடி, லெப்பைகுடியிருப்பு, வடக்கன்குளம், அழகநேரி, அடங்கார்குளம், சிவ சுப்பிரமணியபுரம், சங்குநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்:
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்வினியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே காயாமொழி, சீர்காட்சி, அருணாசலபுரம், கொம்புத்துறை, பேயன்விளை வடக்குபகுதி, அய்யன்கோவில், இடையன்விளை, முதலூர், சுப்புராயபுரம், தோப்புவளம், தருமபுரி, பன்னம்பாறை, கொம்பன்குளம், கட்டாரிமங்களம், அம்பலச்சேரி, ஞானராஜ்நகர், செம்பூர், ஆதிநாதபுரம், வேலன் காலனி, நங்கைமொழி, பூலிகுடியிருப்பு, ராமசுப்பிரமணியபுரம், பூச்சிக்காடு (நடுவக்குறிச்சி), பூவுடையார்புரம், ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
கோவை மாவட்டம்:
கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல், பாப்பம்பட்டி, நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம், நடுப்பாளையம், பள்ளபாளையம்.
இருகூரில் 27 இல் மின்தடை: இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம்(ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.
சிவகங்கை மாவட்டம்:
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி ஆகிய மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்:
ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவினிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம்.ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை ஆகிய பகுதிகளில் ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.