Categories
மாநில செய்திகள்

ஜூலை 28 ஆம் தேதி அன்று…. பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே…..!!!!!

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வியாழக்கிழமை ஜூலை 28ஆம் தேதிய அன்று சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06907) மதுரையிலிருந்து அதிகாலை 05.45 மணிக்கு புறப்பட்டு காலை 09.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் டூ மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 01.30 மணிக்கு புறப்பட்டு மாலை 05.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Categories

Tech |