யாஷிகா ஆனந்த், சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்ய வரவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் அவரை காண்பதற்காக கோயில் வளாகத்தில் கூட்டம் கூடியது. ஆனால் அஜித் வரவில்லை. அவருக்கு பதில் இரவு 9 மணிக்கு நடிகை யாஷிகா ஆனந்த் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார். இதனால் குஷியான ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க சூழ்ந்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் அனைவரையும் தடுத்து யாஷிகாவை வெளியே அழைத்து வந்தனர்.