Categories
உலக செய்திகள்

70 நகரங்களுக்கு அதிக வெப்ப அலையின் எச்சரிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலையில் தாக்கம் அதிகரித்து கொண்டு அப்பகுதி மக்களை வாட்டி வதைக்கின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பம்  அதிகரித்துள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சிகல் போன்ற பல நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. மழைக்கும், மிதமான வெப்ப நிலைக்கும் பெயர் போன லண்டன் போன்ற நகரங்கள் இத்தகைய வெப்ப அலையை சந்திப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை போன்று சீன  நாட்டில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து  கடுமையான வெப்பநிலை பதிவாகி வருகின்றது.

இருப்பினும் சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வருகிற 26 ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல இடங்களில் வருகிற 31 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வரை முந்தின ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக அதிக வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கையை சீனா விடுத்துள்ளது. இந்த நகரங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் 393 சீன நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் வெப்பத்தின் தாக்கம் இருக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய வெப்பநிலை இன்னும் தீவிரமாக கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |